Categories
அரசியல் மாநில செய்திகள்

யாரை கேட்டு அப்படி செஞ்சீங்க…? மோடி பதில் சொல்லணும்…. பாஜக அரசை கண்டித்த காங்கிரஸ் …!!

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி,  கொரானா இரண்டாவது தொற்று வேகமாக பரவி வருகிறது. நம்முடைய பிரதமர் ஆரம்பத்திலிருந்து சொன்னது என்னவென்றால், இந்திய மக்கள் அனைவருக்குமான மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன,  கைவசம் இருக்கிறது என்று சொன்னார். ஆனால் இன்றைக்கு மும்பை நகரம்…. இன்னும் வட இந்தியாவில் பல பகுதிகளில் மக்கள் அந்த தடுப்பூசியை போட்டு கொள்ள முடியாமல் வெளியேறுகிறார்கள். காரணம்? கையிருப்பு இல்லை.

இந்த நேரத்தில் மத்திய அரசாங்கம் 6 கோடி வேக்சின் ஏற்றுமதி செய்து இருக்கிறார்கள். இந்த அரசாங்கம் சிந்திக்கக்கூடிய அரசாங்கமா? 130 கோடி மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டிய ஒரு இடத்தில், நீங்கள் உற்பத்தி செய்வதே குறைவாக உற்பத்தி செய்கிறீர்கள்… அதிலும் அதை ஏற்றுமதி செய்கிறீர்கள் என்றால்…. அது என்ன விளம்பர நோக்கமா அல்லது இந்திய மக்களை விட பிற நாட்டு மக்களை நீங்கள் நேசிக்கிறீர்களா?

எந்த அடிப்படையில் அந்தக் கொள்கையின் முடிவை பிரதமர் எடுத்தார். இதற்கு பிரதம மந்திரி பதில் சொல்ல வேண்டும். ஏனென்றால் இது இந்திய மக்களுடைய உயிர் பிரச்சனை. எனவே இந்திய மக்கள் உயிர் பிரச்சனைக்கு முதன்மை கொடுக்காமல் 6 கோடி குப்பிகளை அவர் ஏற்றுமதி செய்ததை தமிழக காங்கிரஸ் வன்மையாக கண்டிக்கிறது. பொறுப்பற்ற அரசாங்கம், பொறுப்பற்ற பிரதமர் என்கின்ற குற்றச்சாட்டை அவர் மீது நாங்கள் வைக்கிறோம். எனவே உடனடியாக இதற்கான விளக்கத்தை பிரதம மந்திரி தெரிவிக்க வேண்டும். அதுதான் மிக முக்கியம். அது தான் இந்தியாவின் கேள்வி.

காங்கிரஸ் கட்சியினுடைய கேள்வி என்று கருதி விடக்கூடாது. இது இந்தியாவினுடைய கேள்வி.  உரத்தின் வரலாறு காணாத வகையில் ஏறி இருக்கிறது, தேர்தல் முடிந்த மறுநாளே உரத்தின் விலை அதிகமாகி இருக்கிறது. இதைவிட விவசாயிகளுக்கு நீங்கள் என்ன செய்ய முடியும். ஒரு முளை கயிறு கொடுத்து இருக்கலாம்…. எல்லோரும் தூக்கு மாட்டி செத்துப் போங்கள் என்று…. இவ்வளவு உர விலை கொடுத்து நெல்லையோ கோதுமையோ விளைவிக்க முடியாது.

விவசாயி என்று கூறி கொள்ளுகின்ற எடப்பாடி அவர்கள் எப்படி இதை அனுமதிக்கிறார். மத்திய அரசாங்கம் எப்படி இதை செய்கிறது ? எனவே இந்தியாவில் இருக்கின்ற கோடிக் கணக்கான விவசாயிகள் இதனால் பாதிக்கப்படுவார்கள். அதுமட்டுமல்ல இந்திய விவசாயமும் பாதிக்கப்படும்,  இந்தியாவினுடைய மிகப்பெரிய பொருளாதாரம் பின்புலம் என்பது விவசாயம் தான். அது பாதித்தது என்றால் மாபெரும் இழப்புகள் ஏற்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |