துபாய் ஹோட்டலில் வைத்து திமுக பிரமுகர் ஒருவரை சந்தித்தது குறித்து கேள்விக்கு பதில் அளிக்கும்படி அண்ணாமலைக்கு காயத்திரி ரகுராம் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜகவில் ஏற்பட்ட உட்கட்சி விவகாரங்களை சமூக வலைதளங்களிள் தொடர்ந்து பதிவு செய்து வந்ததன் காரணமாக நடிகை காயத்ரி ரகுராம் அந்த கட்சியின் பொறுப்பில் இருந்து ஆறு மாதங்களுக்கு சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் பாஜகவின் உட்கட்சி விவகாரங்களை தொடர்ந்து பொதுவெளியில் விமர்சனம் செய்து வருகிறார்.
தவறு செய்தவர்களை கட்சிக்குள் தொடர்ந்து வைத்திருப்பது குறித்தும் அண்ணாமலை மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வரும் நிலையில் ‘நான் துபாய் ஹோட்டலில் யாரை சந்தித்தேன் என்று கேட்கிறார்கள். அதற்கு அண்ணாமலை பதில் சொல்வார்” என்று பாஜகவில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் பதிவிட்டுள்ளார். ஏன் இப்படி பதிவிட்டுள்ளார்? அங்கே என்ன நடந்தது என்பதற்கான எந்த தகவலும் இல்லை. நான் அமைதியாக இருக்கப் போகிறேன் என்று காயத்ரி சொல்லிவிட்டார்.