Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

யாரை பார்த்து சிரிக்கிறாங்க….? சூறையாடப்பட்ட உணவகம்…. வைரலாகும் சிசிடிவி காட்சிகள்…!!

உணவகத்திடற்கு சாப்பிட சென்ற இரு தரப்பினர் மோதி கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள வீரவாஞ்சி நகரில் அருண்குமார், பால்ராஜ், நாகராஜ், அஜித் குமார், சங்கரநாராயணன் ஆகியோர் வசித்து வந்துள்ளனர். இவர்கள் 5 பேரும் கோவில்பட்டி மெயின்ரோட்டில் உள்ள ஒரு உணவகத்திற்கு சாப்பிட செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். அதன்படி இவர்கள் 5 பேரும் அந்த உணவகத்திற்கு வழக்கம் போல சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர். அதே சமயம் கிருஷ்ணா நகரில் வசித்து வரும் பிரசாந்த், சிவராமன், முருகன் ஆகிய மூன்று பேரும் சாப்பிடுவதற்காக சென்றுள்ளனர்.

இந்நிலையில் அருண்குமார் மற்றும் அவரது நண்பர்கள் இணைந்து  உணவகத்தில் பணிபுரியும் ஊழியார்களுடன் சிரித்துப் பேசிக்கொண்டிருந்தனர். அப்போது, பிரசாந்த் உள்ளிட்ட மூன்று பேரும் தங்களைப் பார்த்து தான் கேலி செய்து பேசுவதாக நினைத்து அவர்களை கண்டித்துள்ளனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டு ஒருவருக்கொருவர் அங்கிருந்த நாற்காலிகள், டம்ளர்கள், சாம்பார்வாளி, சொம்பு உள்ளிட்ட பாத்திரங்களை தூக்கி எறிந்து தாக்கிக் கொண்டனர். இதனை பார்த்ததும் அந்த உணவகத்திற்கு சாப்பிட வந்தவர்கள் பதறியடித்து வெளியே ஓடி விட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர். அதன் பிறகு இரு தரப்பினரும் அளித்த புகாரின் பேரில் 8 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் இரு தரப்பினரும் சண்டை போட்டுக்கொள்ளும் காட்சிகள் அந்த உணவகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Categories

Tech |