Categories
சினிமா தமிழ் சினிமா

யாரை ரொம்ப பிடிக்கும்….? இவரை தான் எனக்கு ரொம்ப பிடிக்கும்… அப்ப அப்பாவை பிடிக்காதா….? அதிர்ச்சியடைந்த ஸ்ருதி ரசிகர்கள்…!!!!!

அண்மையில் ரசிகர்களுடன் சாட் செய்த ஸ்ருதி அளித்த பதில் தற்பொழுது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் ஸ்ருதிஹாசன். இவர் இசைக் கலைஞரான சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகின்றார். பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த ஸ்ருதிஹாசன் தற்போது தமிழில் பட வாய்ப்பு இல்லை. ஆனால் மூன்று இந்தி திரைப்படங்களில் நடித்து வருகின்றார். ஸ்ருதிஹாசன் தற்போது படங்களில் நடிப்பதை வெகுவாக குறைத்து வருகின்றார்.

ஸ்ருதி தற்போது தனது காதலனுடன் இணைந்து மும்பையில் ஒரே வீட்டில் மும்பையில் வசித்து வருகின்றார். ஸ்ருதிஹாசன் சென்னைக்கு வருவது தற்போது அரிதாகிவிட்டது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக செயல்பட்டு வந்த ஸ்ருதி தற்போது முன்பு மாதிரி இல்லை. அண்மையில் வந்த தந்தையர் தினத்தன்று கமலின் இளைய மகள் தனது அப்பாவின் புகைப்படத்தை பகிர்ந்து தந்தையர் தின வாழ்த்து கூறியிருந்தார். அப்போது கூட ஸ்ருதி இணையத்தில் எதுவும் பதிவிடவில்லை. இதனால் இணையதள வாசிகள் பலரும் கடுமையாக விமர்சனம் செய்தனர்.

அப்பாவுக்கு தந்தையர் தினத்தன்று கூட வாழ்த்து சொல்ல மாட்டாரா இவர். அப்படி என்ன கோபம் என கேட்டு வருகிறார்கள். ஸ்ருதி தனது ரசிகர்களுடன் அவ்வபோது ஆன்லைனில் சாட்டில் பேசுவதை வழக்கமாகக் கொண்டுள்ள நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர் ஒருவர் உங்களுக்கு இந்த உலகிலேயே மிகவும் பிடித்த நபர் யார் என கேட்டதற்கு தனது காதலர் சாந்தனுவின் புகைப்படத்தை பதிவிட்டார். இதை பார்த்த ரசிகர்கள் அப்படின்னா உங்களுக்கு அப்பா கமலை பிடிக்காதா..? அப்பாவை விட காதலனைத் தான் பிடிக்குமா என கேட்டு வருகின்றனர் குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |