மாணவி வீட்டை விட்டு வெளியேறி காதலனை திருமணம் செய்து கொண்ட சம்பவம் பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள மார்த்தாண்டம் பகுதியில் 47 வயது மதிக்கத்தக்க நபர் வசித்து வருகிறார். இவரது 2-வது மகள் அப்பகுதியில் இருக்கும் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் மாணவி தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இதனையடுத்து கல்லூரிக்கு சென்ற மாணவி வீட்டிற்கு திரும்பி வராததால் பெற்றோர் அவரை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளனர். ஆனாலும் மாணவி கிடைக்காததால் அவரது பெற்றோர் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் தங்களது மகளை யாரோ கடத்தி சென்றதாக புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாணவியை தீவிரமாக தேடி வந்துள்ளனர். இதற்கிடையில் மாணவி தனது பெற்றோருக்கு வாட்ஸ்அப் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். அதில் தான் கோழிக்கோட்டில் இருக்கும் ஒரு கிருஷ்ணன் கோவிலில் வைத்து மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டதாக தெரிவித்துள்ளார். எங்களது திருமணத்திற்கு நீங்கள் சம்மதிக்க மாட்டீர்கள் என்ற எண்ணத்தில் இந்த முடிவை எடுத்ததாக மாணவி தெரிவித்துள்ளார். மேலும் தங்களது மகள் திருமணம் செய்து மாலை மாற்றி கொண்ட புகைப்படங்களை பார்த்து மாணவியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.