கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதாசிவம். இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருடைய கடைக்கு அந்த பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அடிக்கடி மளிகை பொருட்களை வாங்கி வந்துள்ளார். மேலும் தன்னுடைய நண்பர்களோடு தாங்கள் வீடு எடுத்து தங்கி இருப்பதாகவும் கல்லூரி ஒன்றில் படித்து வருவதாகவும் அந்த நபர் சதாசிவத்திடம் கூறியுள்ளார். மேலும் தாங்கள் விடுமுறை நாட்களில் கூலி வேலைக்கு செல்வதாகவும், அப்படி ஒரு நாள் வீட்டுக்கு அஸ்திவாரம் தொண்ட செல்லும் பொழுது ஒரு கிலோ தங்க நகை எங்களுக்கு கிடைத்தது. அதை உடனே நாங்கள் இரண்டு பேரும் யாருக்கும் தெரியாமல் எடுத்து வைத்துள்ளோம்.
அந்த நகை கிடைத்தது வீட்டின் உரிமையாளருக்கு கூட தெரியாது. இந்த புதையலின் மதிப்பு பல லட்சம் ரூபாய் இருக்கும். ஆனால் எங்களுக்கு தற்போது கல்லூரி கட்டணம் கட்டுவதற்கு பணம் தேவைப்படுவதால் அந்த புதையல் நகையை நீங்கள் 10 லட்சத்துக்கு எடுத்துக்கொண்டு பணம் கொடுங்கள் என்று கூறியுள்ளனர். இதை நம்பிய அவரும் இது தங்க நகை தானா என்று தான் எப்படி நம்புவது என்று கேட்டுள்ளார். அதற்கு அவர்கள் தங்கள் கையில் இருந்த நகையின் சிறிய பகுதியை கழற்றி கொடுத்துவிட்டு சென்றனர். பின்னர் அவர் பரிசோதித்த போது அது தங்க நகை தான் என்று உறுதியானதால் 10 லட்சத்தை கொடுத்துவிட்டு ஒரு கிலோ நகையை வாங்கி உள்ளார்.
மேலும் அந்த இளைஞர்கள் இதை யாரிடமும் சொல்லாதீர்கள் புதையல் கிடைத்தது என்பதால் அரசு அதிகாரிகளுக்கு தெரிந்தால் வாங்கி சென்று விடுவார்கள் என்றும் கூறியுள்ளனர். 10 லட்சம் ரூபாய்க்கு ஒரு கிலோ நகை கிடைத்துவிட்டது என்று மகிழ்ச்சியை அடைந்த சதாசிவம் அதனை பரிசோதனை செய்து பார்த்தபோது அவை பித்தளை என்பது தெரியவந்துள்ளது. மேலும் போலி நகையை கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிச் சென்று தெரிய வந்ததால் பாதிக்கப்பட்ட சதாசிவம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதுகுறித்து காவல்துறையினர் மோசடி செய்து விட்டு தப்பி ஓடி இரண்டு பேரை வலை வீசி தேடி வருகின்றன. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.