அமெரிக்காவில் யார் அதிபர் ஆனாலும் ஈரானின் கொள்கை மாறாது என அந்நாட்டு மூத்த தலைவர் தெரிவித்துள்ளார்
ஈரானுடன் அமெரிக்கா அதிபர் டிரம்ப் மோதல் போக்கை தொடர்ந்து வந்தார். அதன் ஒரு பகுதியாக ஒபாமா அதிபராக இருந்தபோது கையெழுத்திடப்பட்ட அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து 2018 ஆம் ஆண்டு வெளியேறுவதாக அறிவித்தார். அதோடு கடுமையான பொருளாதாரத் தடைகளை ஈரான் மீது விதித்தார்.
இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இதில் நான்கு வருடங்கள் டிரம்ப் அதிபராக இருக்க போகிறாரா அல்லது ஜோ பிடன் ஆட்சியை கைப்பற்றுவாரா என்பது தெரியவரும். மீண்டும் ட்ரம்ப் அதிபரானால் ஈரானுக்கு தொடர்ந்து அழுத்தம் கொடுப்பார் என நம்பப்படுகிறது.
இந்நிலையில் ஈரானின் மூத்த தலைவர் அயத்துல்லா அலி கூறுகையில், “அமெரிக்காவுடன் இருக்கும் எங்கள் கொள்கை எப்போதும் ஒன்றாகத்தான் இருக்கும். தனிப்பட்ட நபருக்காக அது மாறாது. அதிபராக யார் வருகிறார்கள் போகிறார்கள் என்பது எங்களுக்கு முக்கியம் அல்ல” என்ன கூறியுள்ளார்.