லண்டன் தேம்ஸ் நதியில் சடலமாக மீட்கப்பட்ட பள்ளி சிறுவனுடைய புகைப்படத்தினை அவரது குடும்பத்தினர் வெளியிட்டுள்ளனர்.
பிரித்தானியாவில் கடந்த 28-ஆம் தேதி தலைநகர் லண்டனில் உள்ள தேம்ஸ் நதியில் பள்ளி சிறுவன் ஒருவனுடைய சடலம் கண்டெடுக்கப்பட்டது. ஆனால் அந்த சிறுவன் ஆரம்பத்தில் யார் என்பது தெரியாமல் இருந்த நிலையில் தற்போது அந்த சிறுவனுக்கு 13 வயது இருக்கும் என்பதும், அவருடைய பெயர் சாஹேய்ட் அலி என்பதும் தற்போது தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிறுவன் ஆர்க் க்ளோபெ அகாடமி இன் எலெபாண்ட் அண்ட் காஸ்ட்லே என்ற பள்ளியில் படித்து வந்துள்ளார் என்பதும் சமீபத்தில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த சிறுவன் தன்னுடைய நண்பர்களுடன் கடந்த 20-ஆம் தேதி பேருந்தில் பள்ளிக்கு சென்றிருந்த நிலையில் வீட்டிற்கு திரும்பி வரவில்லை.
இது குறித்து லண்டன் நகர காவல் துறையினர் நிருபர்களிடம் கூறுகையில், கடந்த ஏப்ரல் மாதம் 28-ம் தேதி தேம்ஸ் நதியில் இருந்து மீட்கப்பட்ட சிறுவனின் சடலத்தை அவருடைய குடும்பத்தினர் அடையாளம் கண்டுபிடித்துள்ளனர். மேலும் அந்த சிறுவன் தேம்ஸ் நதியில் கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி தவறி விழுந்திருக்கலாம் என்று கூறிய காவல்துறையினர் இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்துள்ளனர்.