சிம்பு பேட்டியில் பேசியது குறித்து தான் தற்பொழுது பேசப்பட்டு வருகின்றது.
தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருகின்றார் சிம்பு. இவர் நடிப்பில் கௌதம் மேனன் இயக்கத்தில் நேற்று வெளியான திரைப்படம் வெந்து தணிந்தது காடு. இத்திரைப்படத்தை பார்த்தவர்கள் சிம்புவை பாராட்டி வருகின்றார்கள். இத்திரைப்படத்தை பார்ப்பதற்காக ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு செல்கின்றார்கள். வார இறுதி நாட்களில் இந்த கூட்டம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்த நிலையில் சிம்பு பேசிய வீடியோவை பார்த்தவர்கள் அவர் ஒரு பிரபல நடிகரை குத்தி காட்டி பேசியிருப்பதாக கூறுகின்றார்கள். அந்த பேட்டியில் சிம்பு கூறியுள்ளதாவது, நான் எவ்வளவு பெரிய ஆளானாலும் நிச்சயம் யாராவது ஒருவர் என்னைவிட பெரியவராக இருப்பார். நான் ஹாலிவுட்டே போய் நடிச்சிட்டேன்னு வச்சுக்கோங்க. சும்மா ஒரு பேச்சுக்கு சொல்றேன். நான் இப்போ ஒரு ஹாலிவுட் நடிகர் அடுத்து என கேள்வி எழுப்பியுள்ளார். நான் பெரிய ஆளாகிடனும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அது என்ன பெரிய ஆளுன்னு எனக்கு புரியவில்லை. நான் என்னுடைய வேலையை ஒழுங்காக செய்வது தான் என்னை பெரிய ஆளாக்கும் என நினைப்பதாக சிம்பு கூறி உள்ளார்.