தெலுங்கு சினிமாவில் குணச்சித்திர வேடங்களில் நடித்த புகழ் பெற்றவர் அனுசியா பரத்வாஜ். இவர் கடந்த 2003-ம் ஆண்டு வெளியான நாகா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இவர் ரங்கஸ்தலம் என்ற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த உறுதிணை கதாபாத்திரத்திற்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றார். இவர் சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தியிருப்பார். இந்நிலையில் நடிகை அனுசியா பரத்வாஜிக்கும் நடிகர் விஜய் தேவரகொண்டாவுக்கும் இடையே அர்ஜுன் ரெட்டி படம் வெளியானதில் இருந்து கடும் மோதல் நிலவுகிறது. இதன் காரணமாக விஜய் தேவரை கொண்ட ரசிகர்களுடன் அனுசியா அடிக்கடி மல்லுக்கட்டி வருகிறார்.
அந்த வகையில் நடிகர் விஜய் தேவர கொண்டாவின் லைகர் படத்தை கலாய்த்து அனுசியா ஒரு டுவிட்டர் பதிவை வெளியிட்டுள்ளார். இதைப் பார்த்து கடுப்பான விஜய் தேவரகொண்டா ரசிகர்கள் அனுசியாவை ஆபாசமான வார்த்தைகளில் திட்டி வருவதோடு, #Aunty என்ற ஹேஸ்டேக்கையும் டிரெண்டாக்கி வருகின்றனர். இதனால் கடுப்பான அனுசியா 40 வயதானால் நாங்கள் ஆண்டியாகி விடுவோமோ என விஜய் தேவர கொண்டா ரசிகர்களுக்கு இணையத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.