Categories
தேசிய செய்திகள்

“யார் அழைப்பது” நம்பர் இல்லையா…? இனி அந்த கவலை வேண்டாம்…. TRAI சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் விரைவில் அழைப்பாளர்களின் KYC அடிப்படையிலான பெயரை திரையில் தோன்ற கூடிய வகையில் புதிய உத்தரவை பிறப்பிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நீங்கள் பதியாமல் வைத்திருக்கும் எண்ணில் இருந்து யாராவது உங்களை அழைத்தால் அவர்களின் எண் மட்டுமே திரையில் தோன்றும். ஆனால் TRAI இன் இந்த கட்டமைப்பை இறுதி செய்த பிறகு தொலைபேசியில் பயனரின் KYC அதாவது ஆதார அட்டை அல்லது அதற்கு ஈடான அரசு ஆவணங்களில் உள்ள பெயரை காட்சி அளிக்கும். இது குறித்து டிராய் தலைவர் பிடி வாகேலா கூறியது, TRAI விரைவில் அழைப்பார்களின் KYC அடிப்படையிலான பெயர்களை போன் திரைகளில் காட்டுவதற்கான அமைப்புகளை உருவாக்க தொடங்கும். இந்த முறைக்கு பிறகு யாராவது உங்கள் செல்போனில் அழைத்தால் அவருடைய பெயர் திரையில் தோன்றும்.

இந்த அமைப்பு செயல்படுத்தப்பட்டால் தொலைத்தொடர்பு துறையின் விதிகளின்படி டெலிகாம் நிறுவனங்கள் KYC யில் உள்ள பெயர் தொலைபேசி திரையில் தோன்றும் என்று அவர் கூறினார். இந்த அம்சத்தைக் கொண்டு வந்தால் பயனர்கள் போலி அழைப்புகளை தவிர்க்க முடியும். இந்த செயல்பாட்டில் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்து வாடிக்கையாளர்களின் அதிகாரபூர்வமான பெயரான KYC ஐ உள்ளிட வேண்டும். மேலும் வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம் அல்லது மின் கட்டண ரசீதை ஆவணங்களாக அளிக்க வேண்டும். இந்தப் புதிய அமைப்பால் மோசடிக்கான வாய்ப்புகளை குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் புதிய KYC அடிப்படையிலான செயல்முறை செயல்படுத்தப்பட்டால் அழைப்பாளரால் உங்கள் அடையாளத்தை மறைக்க முடியாது.

Categories

Tech |