யார் இந்து என்ற தலைப்பில் டுவிட்டரில் ஹேஷ்டேக் ஒன்று வைரலாகி வருகிறது. அதைப்பற்றி இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
கடந்த சில வருடங்களாக தமிழக அரசியல் களத்தில் ஜாதி, மதம் குறித்த விவாதங்கள் பேசும் பொருளாகி உள்ளது. மதம் குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும், ஜாதி குறித்து பேசுவோர் அதற்கு ஆதரவான கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு விவாதித்து வருகின்றார்கள். இதனிடையே தான் தமிழ் தேசிய அரசியல், தமிழக அரசியலில் மாற்றாக மேலெழ தொடங்கியது.
As a Telugu guy,
When stand with my Tamil brethren for their #TamilsAreNotHindus
Also ask #யார்இந்து 👊 https://t.co/21vklwXVVP— இன்சொல் கீச்சன் (@InsolKeechan) April 12, 2021
பல இளைஞர்களை ஈர்த்து தமிழ் தேசியம் பேசும் பலரும் அரசியல் மதம், ஜாதி போன்ற அரசியல்களை கருத்துக்களை எதிர்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில்தான் டுவிட்டரில் யார் இந்து என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது. இதில் கருத்து பதிவிடும் பலரும் தமிழ் தேசியத்தை சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள். இது இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது.