Categories
மாநில செய்திகள்

யார் என்ன சொன்னாலும் ? … ”அப்படியே நம்பாதீங்க” உடனே கேள்வி கேளுங்க… C.M ஸ்டாலின் அட்வைஸ்..!!

சென்னை ராணி மேரி கல்லூரியில் 104வது பட்டமளிப்பு விழாவில் நேற்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது, ராணி மேரி கல்லூரி தொடர்ச்சியாக 6 ஆண்டுகள் சென்னையில் குடியரசு தின கொண்டாட்ட நிகழ்வில் நடைபெறும் நடனப்போட்டியில்  முதல் பரிசு பெற்று பெருமை பெற்று இருக்கிறோம். ராணி மேரி கல்லூரி இசைத்துறை மாணவியர் திறை, இசை மற்றும் கர்நாடக இசையில் முன்னிலை வகித்து வருகின்றனர்.

மாணவிகள் மட்டுமல்ல ராணி மேரி கல்லூரியின் உடைய பேராசிரியர்களும், மாணவிகளுக்கு சளைக்காமல் பல சாதனைகளை படைத்துள்ளார்கள். தமிழ் துறை இணை பேராசிரியர் திருமதி லோகநாயகி அவர்கள் தமிழக அரசு சார்பில் கலைஞர் விருது பெற்றுள்ளார். 2011 ஆம் ஆண்டு, 2014 ஆம் ஆண்டு முறையே இந்திய குடியரசுத் தலைவர் அவர்களால் வழங்கப்பட்ட விருதுகளை தமிழ் துறை பேராசிரியர் சிவஞானம் கலை அவர்களும், பொருளியல் துறை பேராசிரியர் விஜயலட்சுமி அவர்களும் பெற்று இருக்கிறார்.

ராணி மேரி கல்லூரியில் சேர்ந்து பயின்று மாற்று பாலினத்தவராக மாறியவருக்கு இறுதி ஆண்டு தேர்வு எழுதி அவர் பட்டம் பெற்று செல்லும் வரையிலான அனைத்து உதவிகளையும் செய்து அவரை தேர்ச்சி பெற வைத்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இப்படி உங்கள் கல்வி ஆனது சாதனை கல்லூரி ஆக இருக்கிறது. பட்டம் வழங்கும் கல்லூரியாக மட்டும் இல்லை திறமையின் கிடங்காகவும் உங்கள் கல்லூரி இயங்கிக் கொண்டிருக்கிறது. நூறாண்டுகளுக்கு மேலாக கல்வி பணியாற்றி வரும் இந்த ராணி மேரி கல்லூரி வருங்காலங்களிலும், பெண் கல்வி மகத்துவத்தை உலக அரங்கிலும் முன்னிறுத்தும் என்று நான் நம்புகிறேன்.

33 மாணவிகளால் தொடங்கப்பட்டு இன்று 5,000 மாணவிகளுடன் மாபெரும் அளவில் உயர்ந்து நிற்கிறது. மிக உயர்ந்த நோக்கம் இருந்ததால்தான் இத்தகைய வளர்ச்சி சாத்தியம். இதேபோன்று உயர்ந்த நோக்கம் கொண்டவர்களாக மாணவியர் அனைவரையும் தாங்கள் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். யாரும் எதை சொன்னாலும் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் பகுத்தறிவோடு கேள்வி கேட்கும், விமர்சிக்கும் அறிவியல் மனப்பான்மையை நீங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும். அப்போது தான் நீங்கள் பெற்ற பட்டம்  முழுமைப் பெறும்.

நாமும் கல்லூரியில் படித்திருக்கிறோம், ஒரு பட்டம் வாங்கி இருக்கிறோம் என்று இல்லாமல் வாங்கிய பட்டத்தில் உயர்ந்த நிலை எதுவோ, அதையும் முயன்று நீங்கள் அடைய வேண்டும். அதன் மூலமாக உச்சமான தகுதியை நீங்கள் பெற வேண்டும். அந்த தகுதி மூலமாக இன்னும் பலரை நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். இன்று பெறும் பட்டம் என்பது முடிவல்ல, தொடக்கம் என்பதை மறக்காதீர்கள். கடற்கரை சாலையிலிருந்து அறிவுச்சாலைக்குள் பயணிக்க போகும் உங்களுக்கு உங்களை இந்த கோலத்தில் கண்டு பெருமிதத்தில் தலைத்திருக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும், மீண்டும் ஒருமுறை வாழ்த்துக்கள் நன்றி வணக்கம்.” என்று பேசினார்.

Categories

Tech |