Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் எழுதிக் கொடுத்தாலும் பரவாயில்லை…. எழுதிக் கொடுத்த பேப்பரை வாங்கி விட்டு பேசுங்கள்… சி.எம்யை கெஞ்சிய குஷ்பூ …!!

செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் குஷ்பூ, தயவுசெய்து யார் எழுதிக் கொடுத்தாலும் பரவாயில்லை, எழுதிக் கொடுத்த பேப்பரை வாங்கி விட்டு பேசுங்கள். ஆனால் இந்த சிறுமிக்கு இந்த மாதிரி ஒரு கொடுமை நடந்திருக்கிறது என்றால் அதைப்பற்றி பேசுங்கள், சிபிஐ விசாரணை எங்களுக்கு வேணும். நீங்கள் சிபிஐ விசாரணை, அதற்கான நடவடிக்கை எடுக்கின்ற வரைக்கும் எங்களுடைய போராட்டம் தொடரும்.

எங்களுடைய மாநிலத் தலைவர் அண்ணாமலைஜி சொன்னமாதிரி நீங்கள் சிபிஐ விசாரணை நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நாங்கள் நீதிமன்றத்திற்கு போவோம், நீதிமன்றத்தில் சிபிஐ விசாரணைக்கு நாங்கள் வலியுறுத்துவோம். அப்போ இந்த குழந்தை பொய் சொல்கிறதா ? என்று கேட்கிறேன், சேகர்பாபு அவர்களிடம் நான் கேட்கிறேன் அந்த குழந்தை பொய் செல்கிறதா என்று. அதைத்தான் நாங்களும் கேட்கிறோம். ஏன் முதலமைச்சர் இதைப்பற்றி பேச மாட்டேங்குறாங்க…

மதமாற்றம் நடக்கவே இல்லை தமிழ்நாட்டில் முதலமைச்சர் அவர்கள் சொல்ல முடியுமா? இந்த சிறுமி வந்து தற்கொலை செய்திருக்கிறார் என்றால் சிறுமி ஒரு வீடியோவை வெளியிட்டு இருக்கிறார் என்றால், அதைப்பற்றி ஏன் முதலமைச்சர் அவர்கள் பேசாமல் இருக்கிறார். அவரை வந்து தைரியமாகச் சொல்லுங்கள்…. தமிழ்நாட்டில் இது போன்று மதமாற்றம் நடக்கவில்லை, இந்த மாதிரி கட்டாய மதமாற்றம் தானே…

நாங்கள் இங்கே நின்று கொண்டு உங்கள் முன்னாடியும் நிச்சயமாக தமிழகத்தில் கட்டாய மதமாற்றம் நடக்குது என்று நாங்கள் சொல்கிறோம். ஏனென்றால் எங்களிடம் எல்லா தகவல்களும் இருக்கிறது. முதலமைச்சர் அவர்கள் இதுபோன்ற மத மாற்றம் நடக்கவில்லை. கட்டாய மதமாற்றம் தமிழகத்தில் நடக்கவில்லை என்றால் தைரியமாக ஒரு அறிக்கை கொடுக்க சொல்லுங்க. அதன் பின் நான் பதில் தருகிறேன்.

நான் சொல்கின்ற விஷயம் ஒன்றுதான், ஆர்ப்பாட்டத்திலும் அதை தான் சொன்னேன். இந்த வீடியோ அந்த குழந்தை எடுத்தது ஒரு வருடத்திற்கு முன்னாடி இருக்கட்டும், ஆறு மாதத்திற்கு முன்னாடி இருக்கட்டும் இரண்டு நாளைக்கு முன்னாடி கூட இருக்கட்டும், ஒரு நாள் முன்னாடி கூட இருக்கட்டும், அதைப்பற்றி பிரச்சினை கிடையாது. அவர் தெளிவாக கட்டாய மதமாற்றம் செய்கிறார்கள் என்று சொன்னார். நாங்கள் கேட்கிறது அதற்கு நீங்கள் நடவடிக்கை எடுங்கள் அவ்வளவுதான் என தெரிவித்தார்.

Categories

Tech |