Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

யார் பயணிகளை ஏற்றுவது…? அரசு பேருந்து ஓட்டுநர்-கண்டக்டரிடம் வாக்குவாதம்…. பரபரப்பு சம்பவம்…!!

பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து அரசு டவுன் பேருந்து பயணிகளுடன் வி.களத்தூர் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து பெரம்பலூர் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம் அருகே இருக்கும் பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றுவதற்காக நின்றது. அப்போது திருச்சியில் இருந்து பெரம்பலூர் வழியாக பூலாம்பாடி நோக்கி செல்லும் தனியார் பேருந்து அரசு பேருந்தை முந்தி சென்று பயணிகளை ஏற்ற முயன்றது. அப்போது கட்டணமில்லாமல் அரசு பேருந்தில் பயணம் செய்யலாம் என்பதால் பெண் பயணிகள் தனியார் பேருந்தை புறக்கணித்து அரசு பேருந்தில் ஏற முயன்றனர்.

இதனை பார்த்த தனியார் பேருந்து ஓட்டுனரும், கண்டக்டரும் அரசு பேருந்து சிறைபிடித்து பயணிகளை ஏற்றக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. இதனையடுத்து பயணிகள் இரண்டு பேருந்துகளின் கண்டக்டர்கள் மற்றும் ஓட்டுநர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

Categories

Tech |