Categories
அரசியல் மாநில செய்திகள்

யார் முதலமைச்சர்…. பழனிச்சாமியா ? ஸ்டாலினா ? பதில் சொல்ல சொன்ன முக.ஸ்டாலின் …!!

தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு குறுகிய காலத்திலேயே தடுப்பணை உடைந்து விவகாரத்தில் ஒப்பந்ததாரரோ மீது நடவடிக்கை எடுக்காது ஏன் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

விழுப்புரம் அருகே காணிக் குப்பம் பகுதியில் உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பிரச்சாரத்தில் பங்கேற்ற அவர் மக்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார் . அப்போது தாய் தந்தை இழந்த குணசேகரி என்ற இளம்பெண் தனது தம்பிகளை படிக்க வைப்பதற்காக படிப்பை பாதியிலே நிறுத்திவிட்டு அல்லல்படுவதாக கண்ணீர் மல்க தெரிவித்தார் . அவருக்கு ஆறுதல் கூறிய ஸ்டாலின், திமுக சார்பில் உதவி செய்யப்படும் என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய ஸ்டாலின் தமிழகத்தில் ஆட்சி என்று நடைபெறுவதே இல்லை என்பதை மக்களை சந்திக்கும் போது அறிந்துகொள்ள முடிந்ததாக கூறினர். விழுப்புரம் கடலூர் எல்லையில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டி முடிக்கப்பட்ட குறுகிய காலத்திலேயே தடுப்பணை உடையதே சுட்டிக்காட்டிய ஸ்டாலின், ஒப்பந்ததாரர் மீது முதலமைச்சர் இதுவரை நடவடிக்கை எடுக்காது ஏன் ? என்று கேள்வி எழுப்பினர்.

தடுப்பணை கட்டியவரை கைது செய்ய இந்த அரசாங்கம் தவறினதற்கு என்ன காரணம்? பொதுப்பணித் துறையில் வைத்திருக்கக்கூடிய பழனிச்சாமி இதற்கு பதில் சொல்வாரா ?எல்லாம் தெரிஞ்ச மேதாவி சிவி சண்முகம் பதில் சொல்லுவாரா ? என ஸ்டாலின் குறிப்பிட்டார். பொதுவெளியில் ஒருமையில் பேசிவரும் அமைச்சர் சிவி சண்முகத்திற்கு கண்டனம் தெரிவித்த ஸ்டாலின், சட்டத்துறை அமைச்சராக உள்ள அவர், ஜெயலலிதா மரணத்தில் உள்ள மரணத்தைக் கண்டு பிடிக்க முயற்சிகாதது ஏன் ? என்று கேள்வி எழுப்பினர்.

பல்லாயிரக்கணக்கான மக்கள் என்னிடம் கோரிக்கை மனுக்களை கொடுக்கிறதை பார்த்து மிரண்டு போன பழனிச்சாமி அவர்கள், குறை தீர்க்கும் வேளாண்மை திட்டம் கொண்டு வரப் போவதாகவும், அதுக்கு போன் செஞ்சா போதும் அப்படின்னு சொல்லி இருக்காரு. அதனால ஸ்டாலினுக்கு இனி வேலை இல்லன்னு சொல்லிருக்காரு. கடந்த நான்கு ஆண்டு காலமா பழனிச்சாமிக்கு இந்த புத்தி வரல. இந்த ஸ்டாலின் சொன்ன பிறகு தான்,

ஆட்சி முடிய போகிற நேரத்தில் தான் புத்தி வருகிறதா ? நான் கேட்கிறேன், யார் முதலமைச்சர் பழனிச்சாமியா ? ஸ்டாலினா ? யார் முதலமைச்சர் ? இதுக்கு முதல்ல பதில் சொல்லுங்க. அதுவும் புகாரை செல் போன் மூலமா சொல்லணுமா ? 2016ஆம் ஆண்டு அதிமுக தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லுச்சு ?பல வாக்குறுதிகள் குடுத்தாங்க. அதுல முக்கியமான உறுதி மொழி அனைவருக்கும் செல் போன் தரப்படும் என்பது, செல்போன் கொடுத்தாங்களா ? இல்லை. பழனிச்சாமி கொடுக்கல, அல்வா தான் குடுத்துட்டு இருக்கிறாரு. எல்லா மக்கள் குறையும் நான் தீர்த்து விட்டேன். ஸ்டாலினிடம் மக்கள் மனு  கொடுக்கல அப்படின்னும் பழனிச்சாமி சொல்லி இருக்கிறார் என்று ஸ்டாலின் விமர்சித்தார்.

Categories

Tech |