சென்னையில் அமைச்சர் சிவசங்கர் மற்றும் தொழிற்சங்கங்கள் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டியதை அடுத்து, அரசு போக்குவரத்து தொழிலாளர்களுக்கான 14ஆவது ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. ஊதிய உயர்வு ஓட்டுநருக்கு குறைந்தபட்சம் ரூ. 2,012, அதிகபட்சம் ரூ.7.981ஆகவும், நடத்துநருக்கு குறைந்தபட்சம் ரூ.1,965, அதிகபட்சம் ரூ.6,640ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதன்படி யார் யாருக்கு எவ்வளவு ஊதியம் கிடைக்கும் என்ற முழு விவரத்தை கீழே காணலாம். ஓட்டுநர்களுக்கு ரூ.2,012 முதல் ரூ.7,981 வரை, நடத்துநர்களுக்கு ரூ.1,965 முதல் ரூ. 6,640 வரை, பயணச்சீட்டு பரிசோதகர்களுக்கு ரூ.4,692 முதல் ரூ.7,916 வரை, தொழில்நுட்ப பணியாளர்களுக்கு ரூ.9,329 வரை, அலுவலக பணியாளர்களுக்கு ரூ.6,640 வரை, தொழில்நுட்ப மேற்பார்வையாளர்களுக்கு ரூ. 8,476 வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.