சூரிச் மாகாணத்தில் பொதுமக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் என மாகாண அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா பரவலை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. தற்போது ஸ்விட்சர்லாந்து நாட்டின் தலைநகரான சூரிச் மாகாணத்தில் தடுப்பூசி திட்டம் குறித்து மாகாண அதிகாரிகள் அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில் தடுப்பூசி திட்டத்தில் 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும் எனக்கூறிய நிலையில் தற்போது பொதுமக்கள் அனைவரும் வயது வித்தியாசமின்றி தடுப்பூசி போட்டுக்கொள்ள பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
தடுப்பூசி திட்டம் மெதுவாக செயல்பட்டு வருவதால் இந்த அறிவிப்பு பொதுமக்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இம்மாத கடைசியிலிருந்து பதிவு செய்தல் தொடங்க உள்ளதாகவும் பதிவு செய்துகொள்வதால் உடனடியாக தடுப்பூசி கிடைப்பதற்கு உத்திரவாதம் இல்லை எனவும் கூறியுள்ளனர். ஏப்ரல் மாதத்தில் தடுப்பூசி மையங்கள் திறக்கப்பட உள்ளதாகவும் அதிக ஆபத்து உள்ளவர்கள் முதலில் போட்டுக்கொள்ளலாம் அவர்களுக்கு முன்னுரிமை உண்டு எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.