கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு 750 கோடி பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் காற்று மாசு அதிக அளவு அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருவது மட்டுமல்லாமல், பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தை கண்டுபிடிப்பவர்களுக்கு இந்திய மதிப்பில் 730 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என எலான் மஸ்க் அறிவித்துள்ளார். அதிகரித்து வரும் பூமி வெப்பமயமாதலை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.