Categories
தேசிய செய்திகள்

யாஸ் புயல் கரையை கடக்க தொடங்கியது…. ஒடிசா, மேற்கு வங்கத்தில் வெளுத்து வாங்கும் கனமழை….!!!!

வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி வடக்கு வடமேற்கு நோக்கி நகர்ந்தது. அதற்கு யாஷ் புயல் என பெயரிடப்பட்டு உள்ளது. அதி தீவிர புயலாக வலுப்பெற்றுள்ள யாஸ் புயல் கரையை கடக்கும் நிகழ்வு இன்று காலை தொடங்கியது. ஒடிசா மேற்கு வங்காளம் கடலோரப் பகுதியில் பாரதீப் மற்றும் சாகத் தீவுக்கு இடையே தம்ரா துறைமுகத்தின் வடக்கு மற்றும் பாலசோரின் தெற்கு பகுதி அருகே நண்பகல் கரையை கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 140 கிலோமீட்டர் வரையில் பலத்த காற்று வீசும் என கணிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் புயல் பாதிப்பை ஏற்படுத்தும் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தாழ்வான பகுதிகளில் வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மீட்பு குழுவினர் அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.

புயலின் தாக்கம் காரணமாக மேற்கு வங்காளம் மற்றும் ஒடிசாவின் கடலோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. புயல் நெருங்கி வருவதால் பாலசோர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

Categories

Tech |