மலை மாதேஸ்வரன் கோவிலில் யுகாதி பண்டிகையை ஒட்டி பெரிய தேரோட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்ட எல்லையின் அருகே கர்நாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டம் , கொள்ளேகால் தாலுகாவில், மாதேஸ்வரன் மலையில் மலை மாதேஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் நேற்று யுகாதி பண்டிகையை ஒட்டி பெரிய தேரோட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம் மற்றும் கர்நாடக மாநிலத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முன்னதாக பெரிய தேர் கோவில் வெளி பிரகாரத்தில் வலம் வந்த போது பக்தர்கள் மரிக்கொழுந்து சொருகிய வாழைப்பழத்தை தேர் மீது வீசி தங்கள் நேர்த்தி கடனை செலுத்தி வந்தனர். மேலும் அவர்கள் பக்தி கோஷமிட்டு சாமியை வணங்கியுள்ளனர். பெரிய தேர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வந்துள்ளது. பெரிய தேர்க்கு முன்னதாக பசுத்தேர், புலித்தேர் ருத்ராட்ச தேர் போன்றவை வளம் வந்துள்ளது. யுகாதி பண்டிகையை யொட்டி மலை மாதேஸ்வரன் கோவில் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.