தேசிய தேர்வு முகமையால் ஒவ்வொரு வருடமும் பல்கலைக்கழக மானிய குழுவின் நெட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதில் தேர்ச்சி பெறுவதன் மூலமாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவி பேராசிரியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மருத்துவ படிப்புக்கு விண்ணப்பிக்க முடியும். அதன்படி வருகின்ற 2023 ஆம் ஆண்டுக்கான நெட் தேர்வு வருகின்ற பிப்ரவரி 21ஆம் தேதி முதல் மார்ச் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கு ஜனவரி 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. கணினி அடிப்படையில் 83 பாடங்களில் உதவி பேராசிரியர் தேர்வு நடத்தப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
Categories