மாரிதாஸ் எனும் பிரபல யூடியூபர் அரசியல் குறித்து பல்வேறு கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வந்தார். இவரின் வீடியோவுக்கு என்று தனி ரசிகர் பட்டாளமே உண்டு. ஒவ்வொருநாளும் நிகழும் அரசியல் நிகழ்வுகள் குறித்து மிகவும் புள்ளி விவரத்தோடு பேசக்கூடிய மாரிதாஸ் தற்போது கைது செய்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. காவல்துறை குறித்து அவதூறு பரப்பும் வகையில் கருத்து வெளியிட்டதாக கூறி அவர் மதுரையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார்.
இந்த நிலையில் சமூக வலைதளத்தில் அவதூறான கருத்துக்களை பதிவிட்ட யூடியூபர் மாரிதாஸை வரும் 27-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க எழும்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.