Categories
தேசிய செய்திகள்

யுபிஐ பணபரிவர்த்தனை… இந்த ஆண்டு மிக அதிகம்… எவ்வளவு தெரியுமா?…!!!

யுபிஐ மூலமாக மேற்கொள்ளப்படும் பணப்பரிவர்த்தனை எண்ணிக்கையானது கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 2 பில்லியனை எட்டியுள்ளது.

ஊரடங்கு காலகட்டத்தின் போது மின் பரிமாற்றங்கள் நாடு முழுவதும் அதிகரித்துள்ளன. மேலும் பரிவர்த்தனை செய்யும் பணத்தின் அளவு தொடர்ந்து அதிகரித்து கொண்டு இருக்கிறது. இந்த நிலையில் யுபிஐ மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற பண பரிவர்த்தனை எண்ணிக்கையானது அக்டோபர் மாதம் இரண்டு பில்லியனை தாண்டி இருப்பதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி அமிதாப் காந்த் கூறியுள்ளார்.

கடந்த வருடம் அக்டோபர் மாதம் பண பரிவர்த்தனை எண்ணிக்கை 1.14 பில்லியனாக இருந்தது. அது 80 சதவீதம் உயர்ந்து, தற்போது இந்த வருடம் அக்டோபர் மாதம் 2.07 மில்லியனாக உயர்ந்துள்ளது. இதனைப் போலவே பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகையும் ரூ.1,91,359.94 கோடியில் இருந்து 101% உயர்ந்து ரூ.3, 86,106.74 கோடியாக இருக்கிறது என அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |