நாடு முழுவதும் பணப்பரிவர்த்தனைகளுக்கு G Pay, Phone Pay, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போது அனைத்து பரிவர்த்தனைகளும் ஆன்லைன் மூலமாகவே நடைபெறுகிறது. பெரும்பாலான மக்களும் யு பி ஐ பரிவர்த்தனைகளை மேற்கொள்கிறார்கள்.
இந்நிலையில் யுபிஐ செயலிகள் மூலம் நடைபெறும் பணப்பரிவர்த்தனைகளுக்கு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் அளவு நிர்ணயம் செய்யப்படும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் யுபிஐ செயலிகளுக்கு 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வரை எந்தவித கட்டுப்பாடும் விதிக்கப்படாது என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் யுபிஐ மூலம் 11.90 லட்சம் கோடி பணப்பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.