Categories
சினிமா தமிழ் சினிமா

யுவன் இசையில், சிம்பு குரலில்… தெறிக்கவிடும் ‘மாநாடு’ பட இரண்டாவது பாடல்…!!!

சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள மாநாடு படத்தின் இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மாநாடு. வெங்கட் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாகவும், எஸ்.ஜே.சூர்யா வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும் பிரேம்ஜி அமரன், கருணாகரன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், அரவிந்த் ஆகாஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

இந்த படத்தின் டீசர், ட்ரெய்லர், முதல் பாடல் ஆகியவை வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மாநாடு படத்தின் இரண்டாவது பாடலான ‘Voice Of Unity’ என்ற பாடல் வெளியாகியுள்ளது. சிம்பு மற்றும் தெருக்குரல் அறிவு இணைந்து பாடியுள்ள இந்த அதிரடியான பாடல் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் வருகிற நவம்பர் 25-ஆம் தேதி உலகமெங்கும் தியேட்டர்களில் ரிலீஸாக உள்ளது.

Categories

Tech |