யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஆல்பம் பாடலை நடிகர் சிம்பு பாடியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது .
தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் சிம்புவும் பிரபல இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவும் நெருங்கிய நண்பர்கள். நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மன்மதன், சிலம்பாட்டம், வல்லவன், வானம் ஆகிய படங்களுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இந்த படங்களில் இடம்பெற்ற பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு படத்திற்கும் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Directed by @DONGLI_JUMBO
Featuring @kalidas700 & @akash_megha
Lyrics by @LyricistVR
Choreography by @iamSandy_Off
DOP @vidhu_ayyanna https://t.co/hQrIb5n4oW— Raja yuvan (@thisisysr) June 27, 2021
இந்நிலையில் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள ஆல்பம் பாடலை சிம்பு பாடியிருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த ஆல்பம் பாடலில் காளிதாஸ் ஜெயராம், மேகா ஆகாஷ் இருவரும் நடித்துள்ளனர். மேலும் இந்த பாடலுக்கு பிரபல நடன இயக்குனர் சாண்டி நடனம் அமைத்துள்ளார். விரைவில் இந்த ஆல்பம் பாடல் வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.