இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இதுவரை இரண்டு முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்தது இல்லை.
தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இவர் தனது இசையால் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர். ஆரம்பத்தில் இவரது இசைக்கு சரியான வரவேற்பு கிடைக்கவில்லை. இதன்பின் துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் பிரபலமடைந்த யுவன் ஷங்கர் ராஜாவிற்கு பலர் டாப் ஹீரோக்கள் படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் யுவன் சங்கர் ராஜா இதுவரை இரண்டு முன்னணி கதாநாயகர்களின் படங்களுக்கு இசையமைத்தது இல்லை .
அதாவது யுவன் சங்கர் ராஜா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் ஆகியோரின் ஒரு படத்திற்கு கூட இதுவரை இசையமைத்தது இல்லை. இனிமேலும் இவர்கள் படங்களில் இசையமைக்கும் வாய்ப்பு யுவன் சங்கர் ராஜாவுக்கு கிடைக்குமா என்பது சந்தேகம்தான் .