யுவன் சங்கர் ராஜாவிற்கு வீடியோ ஒன்றை பதிவிட்டு இளையராஜா வாழ்த்துக்களை கூறியுள்ளார்.
தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருகின்றார் யுவன் சங்கர் ராஜா. இவரின் பாடல்கள் அனைத்துமே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துவிடும். இந்நிலையில் அவர் இன்று தனது 43வது பிறந்தநாள் கொண்டாடுகின்றார். இதனால் அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலம் இணையத்தில் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றார்கள். அந்த வகையில் யுவன் சங்கர் ராஜாவிற்கு வாழ்த்து கூறி இசையமைப்பாளர் இளையராஜா இணையத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு இருக்கின்றார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, “ஒரு காலகட்டத்தில் வந்து ஆழியாறு டைம் சென்று காம்போ செய்வது கொஞ்சம் காலம் பழக்கமாக இருந்தது. நிறைய படங்களுக்கு ஆழியாறு டேம் கெஸ்ட்ஹவுஸில் தான் இரண்டு மூன்று நாட்கள் தங்கி நான்கு ஐந்து படங்களுக்கு காம்போஸ் செய்வது என முடிவு செய்து செல்வோம். அப்படி ஒரு காம்போசிங்க்காக இயக்குனர் மகேந்திரனும் கே.ஆர்ஜியும் என்னை அழைத்துச் சென்றார்கள். தயாரிப்பாளர் கே.ஆர் ஜிக்கு கோவையில் வீடு இருப்பதால் அவர் அங்கு சென்று வருவார். அப்படி சென்றவர் மாலையில் வந்து என்னுடைய மனைவிக்கு பிரசவம் நடந்து இருப்பதாகவும் மகன் பிறந்திருப்பதாகவும் சொன்னார்.
அப்பொழுது சந்தோஷமாக இருந்தது. என்னுடைய மனைவி பிரசவத்தின் போது கூட கம்போசிங் செய்வதென்று தான் இருந்திருக்கிறேன், தவிர மனைவியை பக்கத்தில் இருந்து பார்க்கவே இல்லை. எனது மனைவி அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மகன் பிறந்திருப்பதாக வந்து செய்தி சொன்ன நேரத்தில் ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அன்று கம்போஸ் செய்த பாடல் தான் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜானி படத்தின் சினோரீட்டா பாடல் எனக் கூறி யுவன் ஹேப்பி பர்த்டே யுவன் என பதிவிட்டு இருக்கின்றார்.
Happy Birthday, Yuvan @thisisysr @IMMOffl pic.twitter.com/DLQzMPwA9l
— Ilaiyaraaja (@ilaiyaraaja) August 31, 2022