தமிழக மக்கள் தற்போது அதிகம் வரவேற்பு கொடுத்து வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக்பாஸ் 6. எந்த ஒரு சீசனிலும் இல்லாத வித்தியாசங்கள் எல்லாம் இந்த சீசனில்தான் நடந்து வருகிறது. இதற்கிடையில் கமல்ஹாசன் அவர்கள் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி என்பதால் மக்கள் அதிகம் ரசித்து பார்க்கின்றனர். இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி வாயிலாக பல பேர் பிரபலமாகி உள்ளனர்.
அவர்களில் ஒருவர்தான் ஐக்கி பெர்ரி. தற்போது ஐக்கி பெர்ரி பிரபல இசையமைப்பாளரான யுவன்ஷங்கர் ராஜாவுடன் புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அவருடைய ஸ்டூடியோவுக்கு சென்று போட்டோ எடுத்திருப்பதால், ஒரு வேலை ஐக்கி பெர்ரி யுவன்ஷங்கர் ராஜா இசையில் பாடப்போகிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். எனினும் புகைப்படத்துக்கு பின்னால் இருக்கும் காரணம் எதுவும் தெரியவில்லை.