இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாவற்றிற்கும் க்யூ ஆர் கோடுகளை ஸ்கேன் செய்தோ அல்லது மொபைல் எண்ணை பயன்படுத்தியோ பணத்தை அனுப்பி விடுகிறோம். பெரும்பாலான சமயங்களில் அவசரம் அவசரமாக பணம் அனுப்பும்போது சில நேரங்களில் தவறுகள் நடந்து விடுகிறது. அதாவது ஒரு வங்கி கணக்கிற்கு பதிலாக மற்றொருவரின் கணக்கிற்கு பணம் அனுப்பி விடுகிறோம். அப்படி மாற்றி அனுப்பப்படும் பணத்தை திருப்பி எப்படி வாங்குவது என்று போராடுவோம்? அவ்வாறு பணத்தை மாற்றி அனுப்பினால் அதை பெறுவதற்கான வழியை இங்கே காண்போம்.
அதாவது பேடிஎம், ஜிபே, போன் பே, என்று எந்த upi ஆப்களில் நீங்கள் தவறாக பணம் செலுத்தி இருந்தாலும் அதனை உடனடியாக வாடிக்கையாளர் சேவைக்கு சென்று புகார் அளிக்க வேண்டும். அதே சமயம் உங்கள் வங்கியின் ஹெல்ப்லைன் எண்ணை அழைத்து புகாரை பதிவு செய்து கொள்ளலாம். அதோடு மற்றொரு புகாரையும் அளிக்க வேண்டும். இந்நிலையில் இந்திய தேசிய கொடுப்பனளவு கழகம் NCPI வெப்சைட்டிற்கு சென்று அதன் மேலே உள்ள தரவுகளில் what we do என்ற தெரிவை சொடுக்கினால் அதில் உள்ள அனைத்து யூபியை பெயர்களும் வரிசையாக காட்டப்பட்டிருக்கும். அதில் நீங்கள் எந்த யூபியை கணக்கை பயன்படுத்தி தேர்வு செய்து அதில் தகராறு நிவர்த்தி பொறிமுறைக்கு செல்ல வேண்டும். அதற்கு நீங்கள் https://www.npci.org.in/what we do/UPI/dispute-redressal-mechanism என்பதையும் கிளிக் செய்து கொள்ளலாம்.
இதில் பரிவர்த்தனை தகவல் என ஒரு தகவலை பார்ப்பீர்கள். அனைத்து விவரங்களையும் சரியாக நிரப்ப வேண்டும். அதன் பின் பரிவர்த்தனை குறித்த சில விவரங்களை பரிவர்த்தனை தன்மை, ட்ரான்ஸ்ஸாக்ஷன் ஐடி, சிக்கல், வங்கி பெயர், பரிவர்த்தனை தேதி, தொகை, இமெயில் ஐடி மற்றும் மொபைலில் போன்ற விவரங்கள் இதில் அடங்குகிறது. இந்த படிவத்தை நிரப்பிய பின் சிக்கல் பதிவு செய்யப்பட்டு விரைவாக தீர்க்கப்படும். மேலும் தவறாக அனுப்பிய பணமும் திரும்ப வங்கி கணக்கிற்கு வந்து சேர்ந்து விடுகிறது.
ஆர்.பி.ஐ வழிகாட்டுதலின்படி நீங்கள் தவறாக மற்றொருவர் வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பி இருந்தாலும் bankingombudsman.rbi.org.in என்ற வெப்சைட்டிற்கு சென்று புகார் செய்து கொள்ளலாம். ஆனால் இது சிறிது நேரம் எடுக்கும். இருப்பினும் உங்களது பணம் திருப்பி அளிக்கப்படும்.