Categories
இந்திய சினிமா சினிமா விமர்சனம்

யூடியூபில் வெளியான அல்லு அர்ஜுன் திரைப்படம்…. 30 கோடி பார்வையாளர்கள்…. கொண்டாடும் ரசிகர்கள் கூட்டம்….!!

யூடியூபில் வெளியாகிய நடிகர் அல்லு அர்ஜூனின்  திரைப்படம்  30 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டதை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

 

2016ஆம் ஆண்டு வெளியான சரைநோடு திரைப்படத்தின்  இயக்குனர் போயபதி  சீனு , கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டு  இசையமைப்பாளர் தமன்னால் இசையமைக்கப்பட்டது.  இத்திரைப்படம்  அல்லு அர்ஜுன், கேத்தரின் தெரசா உள்ளிட்ட பல நடிகைகள் நடிகர்கள் நடித்து தெலுங்கில் மிகப்பெரும் வெற்றி பெற்றது .
இதைத்தொடர்ந்து இந்த திரைப்படம் ஹிந்தி மொழியில் டப்பிங் செய்து 2017 ஆம் ஆண்டு யூடியூப்பில் வெளியியான இத்திரைப்படதை  இந்தியாவில் முதல்முறையாக 30 கோடி பார்வையாளர்களால் பார்க்கப்பட்டது .

சமூக வலைதளங்களில் நடிகர் அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் இதை கொண்டாடும் விதமாக ??Sarrainodu300Millionview  ஹாஸ்டாக்கை ட்ரெண்டிங் செய்து கொண்டிருக்கின்றனர். இதனிடையே நடிகர் அல்லு அர்ஜுன் ,சுகுமார் இயக்கும் புஷ்பா என்ற திரைப்படத்தில், பிரகாஷ்ராஜ், ராஷ்மிகா போன்ற நடிகர்களோடு நடித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

Categories

Tech |