Categories
மாநில செய்திகள்

யூடியூப் தவறாக பயன்படுத்துவதை தடுக்க வேண்டும்…. உயர்நீதிமன்ற மதுரை கிளை….!!!

யூடியூபை தவறாக பயன்படுத்துவதை தடுப்பதற்கு வழி முறைகள் தேவை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. இந்தியாவில் பல லட்சம் பேருக்கு யூடியூப் வேலை வழங்கி உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. யூடியுப் மூலம் பல நல்ல விஷயங்கள் இருந்தாலும் அதை பலர் தவறாக உபயோகப்படுத்தி வருகின்றனர். நீதிமன்றத்திற்கு உதவ நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் ராமகிருஷ்ணன் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.

முதல்வர் பற்றி கடுமையாக விமர்சித்த வழக்கில் சாட்டை துரைமுருகன் ஜாமீனை ரத்து செய்யக்கோரி மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். மேலும் யூடியூப்பில் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது மற்றும் துப்பாக்கி தயாரிப்பது போன்ற வீடியோக்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

தவறான விஷயங்களை அரசு தடுக்க வேண்டும். மேலும் யூடியூப் தவறான வீடியோக்களை பதிவேற்றம் செய்வதை தடுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சைபர் கிரைம் டிஜிபி விரிவான விவரங்களை ஒரு வாரத்துக்குள் நீதிமன்றத்தில் சமர்பிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |