Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

“யூடியூப்” பார்த்து ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த 5 பேர்…. போலீசாரிடம் சிக்கியது எப்படி…? பரபரப்பு சம்பவம்…!!

கர்நாடக மாநிலத்தில் உள்ள பொம்மசந்திரா அருகே ஸ்ரீராம்புராவில் இருக்கும் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம் மையம் அமைந்துள்ளது. கடந்த 22-ஆம் தேதி கியாஸ் கட்டர் மூலம் மர்ம நபர்கள் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த ஜிகனி போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்போது ஆட்டோவில் வந்த 5 பேர் ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்தது தெரியவந்தது.

இதனால் ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது ஏ.டி.எம் எந்திரத்தை உடைத்த 5 பேரும் அசாம் மாநிலத்தை சேர்ந்த முகமது ஆசிப்(26), பாபு நோகினயா(23) தில்வார் உசேன்(21), பிஸ்வால்(29), ஆமீன்(21) என்பது தெரியவந்தது. இவர்கள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தனர். ஆடம்பரமாக வாழ ஆசைப்பட்டு யூடியூபில் வீடியோ பார்த்து கியாஸ் கட்டர் மூலம் திருட முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |