Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“யூடியூப் பார்த்து தெரிஞ்சிக்கிட்டேன்” இன்ஜினியரின் பரபரப்பு வாக்குமூலம்… போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

நகை கடையில் திருட முயன்ற இன்ஜினியரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கடைவீதியில் பத்ரி என்பவர் நகைக்கடை நடத்தி வருகிறார். இந்த கடைக்கு மேல் இருக்கும் வீட்டில் சீனிவாசன் என்பவர் வசித்து வருகிறார். இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் சுவரை இடிக்கும் சத்தம் கேட்டதால் சீனிவாசன் தூக்கத்திலிருந்து விழித்து நகை கடைக்கு வந்து பார்த்துள்ளார். அப்போது ஒரு நபர் கடையின் சுவரை இடித்து கொண்டிருப்பதைக் கண்டு சீனிவாசன் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து சீனிவாசன் அந்த நபரை பிடிப்பதற்குள் அவர் தப்பி ஓடி விட்டார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஆய்வு செய்தபோது நகை கடை சுவரில் துளையிட்டு திருட முயற்சி செய்தது தெரியவந்துள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கரூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜபாண்டியன் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தியுள்ளனர். அந்த விசாரணையில் ராஜபாண்டி கூறியதாவது, நான் டிப்ளமோ இன்ஜினியரிங் படித்து உள்ளேன். நூற்பாலையில் மெக்கானிக்கல் இன்ஜினியராக வேலை பார்க்கும் எனக்கு கடன் தொல்லை அதிகமாகிவிட்டது. இதனால் யூடியூப் சேனலில் திருடுவது சம்பந்தப்பட்ட வீடியோவை பார்த்தேன். அதன்படி நகை கடையில் திருட முயற்சி செய்தேன் என ராஜபாண்டியன் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Categories

Tech |