Categories
தேசிய செய்திகள்

யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம்…. “பிளஸ் 2 மாணவி செய்த செயல்”… அதிர்ந்து போன பெற்றோர்!!

கேரளாவில் 17 வயது சிறுமி யூடியூப் பார்த்து வீட்டில் பிரசவம் பார்த்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலத்திலுள்ள மலப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கூடக்கல் பகுதியில் 17 வயது சிறுமி வசித்து வருகிறார். இவர் அதே  பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தார். இவரின் தந்தை அருகிலுள்ள ஊரில் இரவு நேர காவலாளி வேலை பார்த்து வருகிறார். அவரின் தாயாருக்கு பார்வை குறைபாடு உள்ளது. இந்நிலையில் இந்த மாணவிக்கும் வீட்டு பக்கத்தில் உள்ள 21 வயது வாலிபருக்கும் பழக்கம் ஏற்பட்டு அடிக்கடி இருவரும்  தனிமையில் சந்தித்து பேசி வந்துள்ளனர். அப்போது திருமணம் செய்து கொள்வதாக மாணவியிடம் அந்த வாலிபர் ஆசை வார்த்தை கூறியுள்ளார். அதன்பிறகு  வாலிபருடன் உல்லாசமாக இருந்த அந்த மாணவி கர்ப்பமானார். மேலும் இந்த தகவலை தனது பெற்றோரிடம் தெரிவிக்காமல் தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறியுள்ளார்.

இதையடுத்து அவரது பெற்றோர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சைக்காக அனுமதித்தபோது, ஆஸ்பத்திரியில் மாணவி கர்ப்பமாக உள்ளார் என்று யாரும் கண்டுபிடிக்கவில்லை. இந்நிலையில் இந்த மாணவி  நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இதையடுத்து கடந்த 20ஆம் தேதி அன்று மாணவிக்கு பிரசவ வலி வந்த போது என்ன செய்வது என்று தெரியாமல் பிரசவம் செய்வது எப்படி என்பதை யூடியூப்பில் பார்த்து அதன்படி தனக்குத்தானே பிரசவம் செய்து கொண்டார். இதில் அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனைத் தொடர்ந்து பிரசவம் முடிந்த பிறகு வீட்டில் வழக்கம்போல நடமாடிய மாணவி அடிக்கடி மாடி செல்வதை பார்த்த பெற்றோர் சந்தேகமடைந்தனர்.

இதனிடையே  குழந்தை அழும் சத்தம் கேட்டு பெற்றோர் மாணவி அறைக்குள் சென்று பார்த்த போது அங்கு ஒரு ஆண் குழந்தை இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்து மாணவியிடம் கோபமாக கேட்டுள்ளனர். அந்த மாணவி, பக்கத்து வீட்டு வாலிபரால் கர்ப்பமாகி அதன் பிறகு தனக்குத் தானே பிரசவம் பார்த்துக் கொண்டேன் என்று அழுது கொண்டே கூறினார்.

இதையடுத்து பெற்றோர் மாணவியை மஞ்சேரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு  சிகிச்சை அளிக்கப்பட்டு, தற்போது மாணவியும் குழந்தையும் நலமாக உள்ளனர் என்று டாக்டர் கூறினார். இந்த சம்பவம் குறித்து மருத்துவமனை அதிகாரிகள் போலீசிடம் தகவல் தெரிவித்ததின் பேரில் மாணவி மற்றும் அவரின் பெற்றோரிடம் விசாரணை நடத்தி வந்தனர். அதன்பிறகு மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபரை போக்சா சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர். இந்தச் சம்பவம்  கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Categories

Tech |