Categories
மாநில செய்திகள்

யூடியூப் மூலம் யோகா பயின்று….. நாட்டிற்கே பெருமை சேர்த்த தமிழ் சகோதரிகள்….. குவியும் வாழ்த்துக்கள்….!!!!

நேபாள நாட்டில் இந்தோ நேபாள் சர்வதேச யோகா போட்டியில் இந்திய நாட்டின் சார்பாக விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வ.புதுப்பட்டி பகுதியை சேர்ந்த சகோதரிகளான சக்தி பிரியா, விஷாலி கலந்துகொண்ட இந்த போட்டியில் தங்கை சக்தி பிரியா, தங்கப் பதக்கத்தையும் அவரது மூத்த சகோதரி வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.

இன்று வீட்டிற்கு திரும்பிய சகோதரிகள் இருவருக்கும் கிராம மக்கள் சார்பாக மேள தாளங்கள் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இதுகுறித்து அந்த சகோதரிகள் கூறும்போது “நாங்கள் இருவரும் பயிற்சியாளர்கள் இல்லாமல் யூட்யூப் மூலமாகவே பயிற்சி செய்ததாகவும், ஏழ்மை நிலையில் உள்ள தங்களுக்கு சிறந்த பயிற்சியாளரை நியமித்தால் இன்னும் பல பதக்கங்களை வெல்ல முடியும்” எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |