யூடியூபில் எஞ்சாயி எஞ்சாமி என்ற பாடல் ஐந்து கோடியை கடந்து சாதனை படைத்துள்ளது.
சமீபத்தில் வெளியான எஞ்சாயி எஞ்சாமி என்ற பாடல் அனைவரையும் கவர்ந்துள்ளது. இந்தப் பாடலை மக்கள் அனைவரும் விரும்பி பார்த்தனர். பிரபலங்கள் ரசிகர்கள் என பலரும் இதை மீண்டும் மீண்டும் கேட்டு வருகின்றனர்.
இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் மகள் தீ இறுதிச் சுற்று படத்தில் ‘ஏ சண்டக்காரா’, மாரி 2 படத்தில் ‘ரெளடி பேபி’, சூரரைப் போற்று படத்தில் ‘காட்டுப் பயலே’, ஜகமே தந்திரம் படத்தில் ‘ரகிட ரகிட’ என வைரல் ஹிட் பாடல்களை பாடியவர். இவரும் ‘தெருக்குரல்’ பேண்டைச் சேர்ந்த தெருக்குரல் அறிவு பாடியுள்ளதுதான் ‘enjoy enjaami’ என்கிற இந்த பாடல். இந்தப் பாடல் யூ டியூபில் 5 கோடி பார்வையாளர்களையும், 2 மில்லியன் லைக்ஸ்களையும் கடந்து சாதனை படைத்துள்ளது.