பிரான்ஸ் உணவு நிறுவனத்தில் பணிபுரிந்த அல்ஜீரிய இளைஞர் அவரது நாட்டிற்கே நாடுகடத்தப்பட்டுள்ளார்.
அல்ஜீரிய நாட்டின் 19 வயதான இளைஞர் ஒருவர் பிரான்ஸ் நாட்டில் உள்ள deliveroo என்ற ஆன்லைன் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளான். இந்நிலையில் அவருடைய மனதில் இருந்த யூத எதிர்ப்பு காரணமாக கடந்த ஜனவரி மாதம் அல்சேஸ் பிராந்தியத்தில் அமைந்துள்ள 2 kosher உணவகங்களில் ஆர்டர்களை ஏற்க மறுத்துள்ளார். மேலும் இது குறித்து உணவு நிறுவனத்தினர் கேட்டபோது யூத வாடிக்கையாளர்களுக்கு டெலிவரி செய்ய மாட்டேன் என கூறி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் கைது செய்யப்பட்ட அந்த அல்ஜீரிய இளைஞர் பிரான்ஸ் நாட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.மேலும் அல்ஜீரிய டெலிவரி பாயை பிரான்சிலிருந்து அவரது சொந்த நாட்டிற்கே நாடு கடத்த பிரான்ஸ் உள்துறை அமைச்சர் Gerald Darmanin கடந்த ஜனவரி 14 ஆம் தேதி ஆணையிட்டுளார். இதனையடுத்து 4 மாத சிறை தண்டனைக்கு பின் இன்று அந்த அல்ஜீரிய இளைஞரை நாடு கடத்தப்பட்டதாக Gerald Darmanin ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.