Categories
Tech

யூபிஐ, பயனர்களுக்கு ஷாக் நியூஸ்…. இனி அதிக பணம் அனுப்ப முடியாது?….. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

இன்றைய காலகட்டத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. மக்கள் அனைவரும் இருந்த இடத்திலிருந்து கொண்டு ஆன்லைன் மூலமாக அனைத்து வேலைகளையும் முடித்து விடுகின்றனர். அதன்படி பணப்பரிவர்த்தனைகளுக்கு கூகுள் பே,போன் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் இந்த செயலிகள் மூலம் நடைபெறும் பரிவர்த்தனைகளுக்கு வரம்புகள் நிர்ணயம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. NCPI அமைப்பு இது குறித்து ரிசர்வ் வங்கியிடம் ஆலோசனை செய்து வருவதாகவும் டிசம்பர் 31ஆம் தேதிக்குள் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வரலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலமாக பயனர்கள் இனி அதிகபட்சமாக குறிப்பிட்ட ஒரு தொகையை தான் பரிவர்த்தனை செய்ய முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |