இந்த நவீன காலக்கட்டத்தில் ஷாப்பிங் செய்யவோ (அல்லது) ஏதேனும் கட்டணங்களை செலுத்தவோ பைகளில் பணத்தை எடுத்து சென்று அதனை எண்ணி கொடுப்பதைவிட டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது (அல்லது) ஆன்லைன் வாயிலாக பணம் செலுத்துவது எளிதான ஒன்றாக மாறி விட்டது. மக்கள் பல பேரும் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவதை எளிதான ஒன்றாக கருதுகின்றனர். இதன் வாயிலாக இருந்த இடத்தில் இருந்துகொண்டே எங்கு வேண்டுமானாலும் பணத்தை அனுப்பவோ, பெறவோ முடிகிறது.
இதனிடையில் வங்கிகள் வழங்கக்கூடிய நெட்பேங்கிங், யூ.பி.ஐ ஆகியவற்றின் வாயிலாக விரைவாகவும், எளிதாகவும் பணம்அனுப்ப முடிகிறது. அதே நேரம் இவற்றில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதேயளவு தீமைகளும் உள்ளது என்பதை நாம் மனதில் கொள்ளவேண்டும். டிஜிட்டல் பரிவர்த்தனையில் பல்வேறு மோசடிகள் நடக்கிறது. டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது நாம் கவனத்தில் கொள்ளவேண்டிய சில விஷயங்களை பற்றி இங்கே தெரிந்துகொள்வோம். உங்களின் யூபிஐ மற்றும் நெட்பேங்கிங்கின் ரகசிய இலக்கஎண்களை யாருடனும் பார்ந்துகொள்ள கூடாது.
எவ்வாறு ஏடிஎம்-ல் பணம் எடுக்க 4 இலக்க ரகசிய எண் முக்கிமானதோ அப்படித்தான் யூபிஐ மற்றும் நெட் பேங்கிங்கின் பின் நம்பர்களும் முக்கியமானது ஆகும். வங்கியில் இருந்து பேசுவதாக கூறி யாரேனும் உங்களது ஓடிபி, பாஸ்வேர்டு, கார்டு (அல்லது) வங்கி விபரங்களை கேட்டால் அந்த அழைப்புகளை நீங்கள் தவிர்க்கவேண்டும். யூபிஐ மற்றும் நெட்பேங்கிங் வாயிலாக நீங்கள் பணம் அனுப்பவோ (அல்லது) பெறவோ முடியும். நீங்கள் ஒருவருக்கு பணத்தை அனுப்பும் போது அவரது யூபிஐ ஐடி மற்றும் மொபைல் எண்ணை நன்றாக சரிபார்த்துவிட்டு அனுப்பவேண்டும்.
இதற்கிடையில் தவறாக அனுப்பிவிட்டால் அப்பணம் உங்களுக்கு திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்பு மிகமிக குறைவு. இதனால் ஒருதடவைக்கு 2 தடவை நன்கு ஆராய்ந்த பிறகே நீங்கள் பணத்தை அனுப்ப வேண்டும். அத்துடன் மிகமுக்கியமான ஒன்று என்னவெனில் உங்களுக்கு மின்னஞ்சல் வாயிலாகவோ அல்லது எஸ்எம்எஸ் மூலமாகவோ வரும் தேவையற்ற லிங்குகளை கிளிக் செய்வது தவறான ஒன்று. இதன் வாயிலாக அதிகளவில் மோசடிகள் நடக்கிறது என்பதை நினைவில்கொள்ள வேண்டும். அப்படிப்பட்ட லிங்குகளை நீங்கள் கிளிக் செய்தால் மோசடி கும்பல் உங்கள் போனை ஹேக்செய்து ரகசியங்கள், வங்கி கணக்குகளிலுள்ள பணத்தை கொள்ளையடித்து விடுவார்கள்.
பெரும்பாலும் உங்களது மொபைலை நீங்கள் லாக்செய்து வைத்திருப்பது நல்லது ஆகும். அதிலும் அறிமும் இல்லாத நபர்கள் இருக்கும் இடத்தில் இருக்கும்போது கட்டாயம் உங்கள் மொபைலை லாக் செய்தே வைத்திருங்கள். ஏனென்றால் மொபைலில் நீங்கள் வைத்திருக்கும் பேமெண்ட் செயலிகள், ரகசிய தகவல்களை மோசடிக்காரர்கள் பயன்படுத்திடக்கூடும். அதுமட்டுமின்றி இதுவரையிலும் உங்களுக்கு அறிமுகம் இல்லாத (அல்லது) பிரபலமில்லாத இணையதள பக்கங்களிலிருந்து ஷாப்பிங் செய்வதை நிறுத்தவேண்டும். அப்படிப்பட்ட இணையதள பக்கங்களில் நீங்கள் ஷாப்பிங்செய்து டிஜிட்டல் முறையில் பணம் செலுத்தும் போது உங்களது விபரங்கள் திருடப்படக்கூடும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும்.