மத்திய அரசு யூரியாவை பயன்படுத்தும் தொழில் முறை அலகுகளின் மீது நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசு யூரியாவை பயன்படுத்தும் தொழில் முறை ஆலைகளின் மீது நாடு தழுவிய ஒடுக்கு முறையை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது யூரியா பதுக்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய ரசாயன உரத்துறை மூத்த அதிகாரி ஒருவர் விளக்கம் கொடுத்துள்ளார். அதாவது யூரியா பல நிறுவனங்களில் பயன்பாட்டில் உள்ளதால் கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்தல், பதுக்கள் போன்ற ஏராளமான குற்றங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. இதுவரை 63.43 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு கண்டுபிடிக்கப்பட்டு, 5.14 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கணக்கில் வராத 2000 மூட்டைகளில் இருந்து யூரியா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்த பதுக்கள் தொடர்பாக நாடு முழுவதிலும் உள்ள 52 ஆலைகளில் ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆய்வின் போது கணக்கில் வராத 740 மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு 2022 கோடி ரூபாய் மதிப்பிலான யூரியா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த யூரியாவை பரிசோதனைக்கு அனுப்பியதில் தரக்குறைவாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காரணமாக 25 ஆலைகளின் உரிமை ரத்து செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான யூரியா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் ஆலைகளின் மீது மத்திய அரசு ஒடுக்கு நடவடிக்கையை எடுத்துள்ளது.