தட்டுப்பாடு காரணமாக வெளிமாநிலத்தில் இருந்து உரம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் ரப்பர், மரவள்ளி கிழங்கு, வாழை மரம், தென்னை மரம், கும்பப்பூ, கன்னிப்பூ போன்றவைகளை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர். ஆனால் பயிர்களுக்கு தேவையான யூரியா, பாக்டம்பாஸ் உரங்கள் தட்டுப்பாடாக இருக்கிறது. இதனால் விவசாயிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
எனவே கொச்சியில் இருந்து ரயில் மூலமாக இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 629 டன் பாக்டம்பஸ் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதை அதிகாரிகள் லாரிகள் மூலமாக குடோன்களுக்கு ஏற்றி சென்றனர். மேலும் இந்த உரங்கள் கூட்டுறவு சங்கங்களுக்கு அனுப்பி வைக்கப்படும். அதன்பிறகு விவசாயிகளுக்கு வழங்கப்படும்.