Categories
தேசிய செய்திகள்

யூ.ஜி.சி நெட் தேர்வு…. எப்போது நடைபெறும் தெரியுமா?…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பல்கலைக்கழகம் மானியக் குழுவின் நெட் தேர்வு (UGC-NET) என்பது தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் தகுதித் தேர்வு ஆகும். இவற்றில் தேர்ச்சி பெறுவதன் வாயிலாக தேசிய அளவிலான பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசியர் பணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர் படிப்புகளுக்கு விண்ணப்பிக்க முடியும். அந்த அடிப்படையில் 2023 ஆம் வருடத்துக்கான நெட் தேர்வு வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி முதல் மார்ச் 10ம் தேதி வரை நடத்தப்படும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தலைவர் மமிடலா ஜகதீஷ் குமார் தெரிவித்து உள்ளார்.

இது தொடர்பாக அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது, இந்திய பல்கலைக்கழகங்களில் ஜூனியர் ரிசர்ச் பெலோஷிப் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கான யூஜிசி நெட்தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் மார்ச் 10 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலமாக நடத்தப்படும். இத்தேர்வுக்கு டிசம்பர் 29 ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு ஜனவரி 17-ஆம் தேதி (மாலை 05:00 மணி) வரை விண்ணப்பிக்கலாம். கூடுதலான விபரங்களுக்கு ugcnet.nta.nic.in எனும் இணையதள முகவரியை தொடர்புக் கொள்ளலாம் என தேர்வு முகமை தெரிவித்து உள்ளது.

Categories

Tech |