யெரெவன் சந்தையில் உள்ள பட்டாசு குடோன் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
ஆர்மீனியாவின் தலைநகரான யெரெவன் நகரத்திற்கு தெற்கே சுர்மாலு என்ற சந்தை அமைந்துள்ளது. இந்த சந்தையில் மாலை நேரத்தில் அதிக அளவு மக்கள் பொருட்களை வாங்கி கொண்டு இருந்தனர். அப்போது அங்கிருந்த பட்டாசு குடோன் வெடித்து பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது.
இந்த விபத்தில் சிக்கி ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளர். மேலும், 51 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உடனடியாக தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அதே சமயத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் பட்டாசு குடோன் வெடித்ததற்கான காரணம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை.