கொரோனா வைரஸ் பாதிப்பால் யோகஹமா துறைமுகத்தில் உள்ள டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் இருந்து இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் இதுவரை 26000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். சீனாவில் மட்டுமின்றி சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கும் இந்த வைரஸ் பரவி வருகிறது. இந்நிலையில் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில் இருந்து 3,711 பேருடன் ஜப்பான் சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான ‘டைமண்ட் பிரின்சஸ்’ என்ற சொகுசு கப்பல் ஜப்பானின் யோகஹமா துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.
கப்பலில் உள்ள ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வைரஸ் பரவாமல் இருக்க பிப்.,19 வரை அங்கேயே கப்பல் நிற்கும் என ஜப்பான் ஏற்கனவே கூறியது. இதையடுத்து கடந்த பிப் .,19ம் தேதி கப்பலில் இருப்பவர்களில் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாதவர்களை வெளியேற்றினர். ஆனால் 132 பணியாளர்கள் மற்றும் 6 பயணிகள் என மொத்தம் 138 இந்தியர்கள் கப்பலில் சிக்கி இருந்தனர்.
Indian crew and passengers from cruise ship Diamond Princess have boarded an Air India flight, sent by the govt of India, to come to Delhi. #Coronavirus pic.twitter.com/dVbbb0Ko8F
— ANI (@ANI) February 26, 2020
இவர்களில் இரண்டு இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டுபிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து மேலும் இரண்டு பேருக்கும் வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதியானது.இதனால் கப்பலில் இருந்தவர்கள் தங்களை மீட்க வலியுறுத்தி வீடியோ வெளியிட்டனர். இதனால் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அவர்களை மீட்க தனி விமானம் அனுப்பி வைத்தது. இந்த விமானம் யோகஹமா துறைமுகத்திற்கு சென்றடைந்துள்ளது. அங்கு இருக்கும் இந்தியர்கள் மீட்கப்பட்டு தனி விமானத்தில் டெல்லி வர உள்ளனர்.