யோகாசனம் என்றால் என்ன அதை என் செய்ய வேண்டும். எதற்கு செய்ய வேண்டும்.எப்பொழுது செய்ய வேண்டும் அதை எப்படி செய்ய வேண்டும். என்பதை பற்றி விளக்கமாக பார்க்கலாம் :
இந்திய கலைகளில் யோகக்கலை பலம் பெறும் கலையாகவே போற்றப்பட்டு வருகிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தோன்றிய இக்கலைக்கு எழுத்து வடிவம் கொடுத்து யோக சூத்திரம் அமைத்து உயிரூட்டி நிலைப்பெற செய்தவர் ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த “பதஞ்சலி முனிவர் “எனவே யோகத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகிறார். அதனால் யோகங்களையும் பதஞ்சலி யோகம் என்றே அழைக்கப் படுகிறது. யோகா என்றால் வடமொழிச் சொல்லுக்கு இணைத்தல் அல்லது ஒன்றாதல் அல்லது ஒருமுகப்படுத்துதல் என்று பொருள்படும். உடலோடு உயிர் இணைந்து நிற்க வேண்டும். உயிரோடு மனம் ஒன்றுபடவேண்டும். உடலும் மனமும் இறைநிலையோடு இணைவதை யோகம் என்பது அறிஞர்களின் விளக்கமாகும்.
இறைநிலை தெளிவில் இருந்து கொண்டு இறைநியதிகளை உணர்ந்து அவற்றிக்கு முரண்படாது அவற்றை மதித்து அவற்றிக்கு இசைவாக வாழ்தலே யோகமாகும். யோகாவில் வெற்றி பெறுவதற்கு ஆசனப் பயிற்சிகள் உதவுகின்றனர் பதஞ்சலி முனிவர் யோக கலையை எட்டு பிரிவுகளாக வகுத்துள்ளார் அவை இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி, எனப்படுகின்றது. அதில் மூன்றாவது அங்கமே உடலை சரிசெய்யும் யோகாசனமாகும். இது தியானம் செய்ய உடலை தயார்செய்வதுடன் நோய் அணுகாமல் காக்கிறது. யோகாவில் எல்லாம் வயதினரும் எளிதில் செய்ய கூடிய ஆசனங்களாக மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆசனங்கள் உடலை இறுக்கமின்றி வைத்துக் கொள்ள உதவுகின்றன. மேலும் இந்த ஆசனங்களை செய்துவிட்டு தியானம் செய்யும் பொழுது மனம் எளிதில் ஒருமை படுத்தப்படுகிறது. யோகாசனம் செய்வதற்க்கான வயது வரம்பு 8 வயதிலிருந்து 80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ஆசனங்களை செய்யலாம். மனதை ஒருநிலைப்படுத்தி செய்தல் மிகவும் அவசியம். யோகாசனம் செய்வதனால் என்னென்ன நன்மைகள் கிடைக்கின்றன என்பதை பார்க்கலாம். சிறுவயதில் இருந்தே நாம் யோகா செய்வதால் நம் விருப்பத்திற்கு ஏற்றவாறு எந்த வயதிலும் உடலை வளைக்கும் தன்மையைத் இப்பயிற்சியின் மூலம் நாம் பெறலாம். மனஅமைதி தன்னம்பிகை வாழ்வில் வெற்றி இவற்றிக்கு ஆசனங்கள் மிகவும் உதவியாக இருக்கும். நோய் வராமல் தடுக்கவும் வந்த நோய்களை குணப்படுத்தவும் இந்த யோகாசனம் பெரிதும் உதவுகின்றது. மூச்சுக் காற்று மண்டலம் இரத்த மண்டலம்,ஜீரண மண்டலம் ,நரம்பு மண்டலம் சீராக இயங்கவும் உதவுகிறது.
யோகாசனம் செய்வதால் உடலுக்கும் உள்ளத்திற்கும் அதிக ஆற்றலை கொடுத்து உறுதியையும் புத்துணர்ச்சியும் அளித்துக்கொண்டே இருக்கும். உடலுக்கும் உயிருக்கும் மனதுக்கும் நல்லிணக்கம் உண்டாகும். ஒழுக்கப் பண்புகளை மனதளவில் வளர்த்துக் கொள்ள உதவுகிறது. நமது நாளமில்லா சுரப்பிகளில் செயல்பாடுகளைத் சீரமைத்தும் நரம்புகளை ஊக்கப்படுத்தியும் இளமை நீடிக்க உதவுகிறது இந்த யோகாசனங்கள். உடலுக்கு அழகான வடிவத்தை கொடுக்கிறது. ஆன்மா தன் பரிபூரண நிலையை உணர்ந்து கொள்வதற்கு யோகாசனங்கள் பெரிதும் உதவுகின்றது. இளமைக்காத்து வயோதிகத்தை தள்ளிப்போடவும் உதவுகிறது தொடர்ந்து நாம் யோகாசனம் உடற்பயிற்சிகள் செய்து வந்தால் நம் உடலில் உள்ள பிரச்சனைகள் அனைத்தும் படிப்படியாக குணமாகும். நோய் வந்தபிறகு நாம் மருத்துவமனைக்கு சென்று நாம் உழைத்த பணம் எல்லாத்தையும் மருத்துவமனைக்கு கொடுப்பதற்கு பதிலாக நாம் யோகாசனம் தினமும் செய்து வந்தால் எந்த ஒரு நோய் நொடியில்லாமல் ஆரோக்கியமாக வாழலாம்.