நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
தமிழ் திரையுலகில் நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் வெளியான இது என்ன மாயம் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். இதை தொடர்ந்து இவர் விஜய், தனுஷ், சூர்யா, சிவகார்த்திகேயன் போன்ற பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். தற்போது இவர் அண்ணாத்த, சாணிக் காயிதம் ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழில் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.
இவர் தெலுங்கில் நடிகர் நிதினுடன் இணைந்து நடித்த ரங் தே திரைப்படம் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது . இந்நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ் யோகா செய்யும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் குவிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.