Categories
உலக செய்திகள்

“யோகா தினம்” பிரதமர் மோடிக்கு பாகிஸ்தான் அதிபர் அடிமையா…? ஆவேசமடைந்த மத அடிப்படைவாதிகள்….!!!

யோகா தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது.

யோகா தினத்தை முன்னிட்டு பாகிஸ்தான் ஒரு ட்விட்டர் பதிவை வெளியிட்டுள்ளது. அந்தப் பதிவில் யோகா செய்வதால் உடல் ஆரோக்கியம் நலமுடன் இருப்பதோடு, மனநிறைவும் ஏற்படும் என்று இருந்தது. அதன்பிறகு யோகா செய்வதால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைப்பதோடு, உலகின் முக்கியமான 2 விஷயங்களில் யோகாவும் ஒன்று எனவும் பதிவிடப்பட்டிருந்தது. இந்த ட்விட்டர் பதிவுக்கு பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த மத அடிப்படைவாதிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக மத அடிப்படைவாதிகள் ஒரு பதிவை வெளியிட்டனர். அதில் இந்திய கலாச்சாரத்தை மேம்படுத்தும் யோகாவை நம் நாட்டில் ஊக்குவிக்க வேண்டாம். அதன்பிறகு பாகிஸ்தான் யோகாவை புறக்கணிக்க  என்று பதிவிட்டு இருந்தனர். மேலும் இந்திய பிரதமர் மோடியை பாகிஸ்தான் அதிபர் ஷபாஷ் பின்பற்றுகிறாரா என்றும் கேள்வி எழுப்பினர். அது மட்டுமின்றி இந்திய பிரதமர் மோடிக்கு நீங்கள் அடிமையா என்றும் பாகிஸ்தான் அரசை விமர்சித்து உள்ளனர்.

Categories

Tech |