காமெடி நடிகர் யோகிபாபுவும், ஓவியாவும் சேர்ந்து நடித்து இருக்கும் படத்தை அறிமுக இயக்குனரான ஸ்வாதீஸ் எம்எஸ் இயக்கியிருக்கிறார். இத்திரைப்படத்திற்கு முதலில் “கான்ட்ராக்டர் நேசமணி” என பெயரிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதில் காண்டிராக்டர் நேசமணி என்பது பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் வடிவேலு ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பெயர் ஆகும்.
அண்மையில் சமூகவலைதளத்தில் காண்டிராக்டர் நேசமணிக்காக வேண்டிக் கொள்ளுங்கள் என்ற ஹேஷ்டேக் உலகளவில் டிரெண்டானது. இந்நிலையில் நடிகர் வடிவேலு மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கி இருப்பதற்கு மதிப்பளிக்கும் வகையில் அந்த படத்தின் பெயரை காண்டிராக்டர் நேசமணி என்பதற்கு பதில் “பூமர் அங்கிள்” என்று மாற்றியுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. இப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் இப்போது வெளியாகி இருக்கிறது. இதை நடிகை வாணிபோஜன் தன் சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்டார்.
அந்த போஸ்டரில் நடிகை ஓவியா பிரபல ஹாலிவுட் திரைப்படமான வொண்டர் வுமன் உடையில் இருப்பது போன்றும், யோகிபாபு கையில் துப்பாக்கியுடன் இருப்பது போன்றும் இடம்பெற்றுள்ளது. அங்கா மீடியா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு தர்மபிரகாஷ் இசை அமைக்கிறார். அதேபோன்று சுரேஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்கிறார். இத்திரைப்படத்தின் போஸ்ட் புரொடக்சன்ஸ் பணிகள் நடந்து வருகிறது. விரைவில் இத்திரைப்படம் வெளியீடு தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
Feeling elated to reveal the First Look of #BoomarUncle Wishing the entire team for a great success.
Prod @Ankamedia2 starring @iYogiBabu @OviyaaSweetz
@karthikthilai @SubashDhandapa2 @IAmAnbu5 @SDharmaprakash@dineshashok_13@swadeshh @EditorElayaraja @johnmediamanagr pic.twitter.com/Gxl0ULoOgj— Vani Bhojan (@vanibhojanoffl) July 6, 2022